முடிந்தது ஒரு மரத்தின் வாழ்வு

ஆட்கள் இருவர் வந்தனர் - மரத்தினை
மேலும் கீழுமாய் பார்த்தனர்

ஒருவர் கீழ் இருந்தார்- மற்றொருவர்
உன்மேல் படர்ந்து ஏறினார்

சட்டென உன் உச்சிக்கு வந்தவர்
பல ஆயுதங்களை தாங்கியிருந்தார்

உன்னில் ஏற அவர்க்கு சிரமம் இல்லை
உன்னில் ஏறியவர்

உன்னையே தாங்கிப் பிடித்தார் - உன்
சிறகுகள் கணப்பொழுதில் விழுந்தது
என் மனம் கனத்தது -உன்

குலைகளை அறுத்தபோது
என் குலை நடுங்கியது - உன்

பிஞ்சு , பூ என யாவற்றையும்
அறுத்தார் பெருமூச்சு விட்டேன்

பல சோகம் படர்ந்தது
நீ இருந்த காலங்களின்
அருமை புரிந்தது வேதனைப் பட்டேன்

இறுதியில் உன் உச்சிக்குருத்தை அறுத்தார்
என் உயிர் பிரிந்ததை போல் இருந்தது

இப்போது யாவும் இழந்து நெடுமரமானாய் !
மலையாக தழைத்த நீ - இப்போது

கலையாகி காட்சிப் பொருளானாய்- என்
வீட்டு முற்றங்களில்

எழுதியவர் : சி.எம்.ஜேசு (30-May-13, 6:28 pm)
பார்வை : 82

மேலே