பையனுக்கேத்த பொண்ணு...
ஒரு அழகான பொண்ணை ரொம்ப நாளா கணக்குப் பண்ணிகிட்டுருந்த பையன் ஒருத்தன், ஒரு விருந்துல சந்திச்சான்.. எப்படியும் லவ் பண்ணிரணும்னு முடிவு பண்ணி, அவள்கிட்டே போயி கடலை போட ஆரம்பிச்சான்.. அவள் வெட்டிக்கிட்டே இருந்தா.. இவனுடைய மனந்தளரா முயற்சிகளும்.. அவளுடைய மூக்குடைப்புகளும்..
அவன் ; நான் ஒரு புகைப்பட நிபுணர்.. உங்கள் முகம் போல அழகான முகத்தை நான் பார்த்ததே இல்லை.
இவள் ; நான் முகச் சீரமைப்பு நிபுணர்.. உங்கள் முகம் போல நிறைய முகங்களை பார்த்திருக்கிறேன்..!
அவன் ; இதற்கு முன் நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம் இல்லையா..?
இவள் ; ஆமாம்.. அன்றிலிருந்து நான் அங்கு போவதையே நிறுத்திவிட்டேன்..!
அவன் ; என் வாழ்க்கையில் இவ்வளவு நாளாக உங்களை எப்படி சந்திக்காமல் இருந்தேன்.?
அவள் ; கண்ணுல படாம இருக்க நான் பட்ட பாடு எனக்குதானே தெரியும்..!
அவன் ; பிரம்மன் முழுத்திறமையையும் காட்டி உங்களை உருவாக்கி இருக்கிறான்..
இவள் ; இருக்கலாம்.. அடுத்ததாக படைத்தது உங்களையா..?
அவன் ; வரும் சனிக்கிழமை நாம் எங்காவது வெளியில் போகலாமா..?
இவள் ; மன்னிக்கவும்.. சனிக்கிழமை மாலையில் எனக்கு தலைவலி வந்து விடும்..!!
அவன் ; உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா..?
இவள் ; வேண்டாம்.. அந்தப் பேரை நீங்க வச்சுக்கிட்டா நல்லா இருக்காது..!
அவன் ; நாம இப்போ சந்திச்சுக்கிட்டது பூர்வ ஜென்ம புண்ணியம்தான் இல்லையா..?
இவள் ; என் கஷ்ட காலமாகவோ, பூர்வ ஜென்ம பாவமாகவோ கூட இருக்கலாம்..!
அவன் ; உங்க பக்கத்து இருக்கை காலியாத்தானே இருக்கு..?
இவள் ; ஆமாம்.. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் உக்காந்து இருக்கறதும் காலியாகப் போகுது..!
அவன் ; உன் மனசுல இருக்கறத தயங்காம என்கிட்டே சொல்லலாம்..
இவள் ; அப்படியா.. இடத்தை காலி பண்ணு..!
அவன் ; உன்னை சந்தோஷமா வச்சுப்பேன்..
இவள் ; ஏன்.. கிளம்பப் போறியா..?
அவன் ; நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ணிக்கோ' ன்னு சொன்னா நீ என்ன சொல்லுவே..?
இவள் ; ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. நான் ஜோக் கேட்டு சிரிக்கறப்போ என்னால பேச முடியாது..!
அவன் ; உன் அழகு என் மனச கலக்குது..
இவள் ; உன் பர்சனாலிட்டி என் வயித்த கலக்குது..!
அவன் ; என்னைப் பார்த்து அன்பா ஒரு தடவையோ ரெண்டு தடவையோ சிரிச்சியா இல்லையா..?
இவள் ; ஒரு தடவை தான்.. நான் எந்த தப்பையும் ரெண்டாவது முறை செய்யறதே இல்லை..!!
அவன் ; உனக்காக இந்த உலகத்தின் மூலைக்கு கூட போவேன்..
இவள் ; அங்கேயே இருந்துடு.. திரும்ப வந்துராதே..!!!
நன்றி ; படித்ததில் பிடித்தது