காதல் என்பது கவிதை அல்ல கலவரம்...!!!

பெண்ணே பெண்ணே மறைந்து விடு
என் இதயத்தை திருப்பி கொடு..!!
கண்ணே கண்ணே அழித்து விடு,
அவள் நினைவினை எரித்து விடு..!!
இதயத்தை கிழிப்பது தான் காதலா..??
பொய்யாக நடிப்பது தான் காதலா..??

அன்பே உன் வார்த்தைகள்
நெருப்பை பற்ற வைக்கிறதே,
எரிகின்ற விளக்கை
அணைக்க வைக்கிறதே..!!
என்னை மட்டும்
நீ தாங்கி கொண்டால்
மரணம் மயங்கி
உலகம் சுருங்கிடுமே,
என்னை விட்டு நீயும் சென்றால்
இறப்புக்கு நானும் நண்பனே...!!

சுயநலமாய் நீ இருந்து
பறித்து போனது என் சுதந்திரமே..!!
அழகில்லை என என்னை சொல்லி
உன் அழகை காட்டி விட்டாயே..!!
அடி போடி கிறுக்கி,
என் வாழ்கையை கிறுக்கி விட்டாய்,
ஓவியத்தை அழித்து விட்டாய்..!!
உன்னால் புரிந்தேன்
காதல் என்பது கவிதை அல்ல
மூளைக்கு இதயம் தரும் கலவரம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (31-May-13, 5:09 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 120

மேலே