காதல் சொல்ல வந்தேன்

கண் முன்னே கடந்தாய்
பலமுறை நீயும் என்னை
ஆனால் கண்டேன் ஒரு முறை உன் விழியை
நானும் விழுந்தேன் காதல் வலையில்!

காதல் என்று சொன்னால் நானும்
பலரையும் கிண்டலாய் கதைத்து வந்தேன்
ஆனால் என்னையும் கவிழ்த்து;
காதலில் தவிக்கவும் விட்டாய்

அழகிய பெண் பூவே நானும் உன்னை
சுற்றி சுற்றி வந்தேன் – தேனீ போல
ஆனால் ஏதோ ஒன்று என்னை
தடுத்தது உன்னிடம் முனுமுனுக்கதான்

முகபுத்தகம் வழி உன்
புகைப்படம் தேடி திறிந்தேனே!
உன்னால் இப்போ என்
முகவரியையும் மறந்தேனே!!
குறுச்செய்தி வழி ஒர் செய்தி
சொல்லவே நானும் தவிக்கிறேன்!
ஆனால் சொல்ல முடியவில்லை
அந்த மூன்றே மூன்று சொல்லை!!

என் வாழ்வின் மழைக்காலத்தில்
பூத்த வானவில்லே
நீ எங்கே சென்றாயோ – என்
வாழ்வில் ஏனோ மறைந்தே போனாயோ?

பேச துடிக்கிறேன் – உன்
இதழொசை கேட்கவும் நினக்கிறேன்
எடுக்க மறுக்கிறாய் ஒலிக்கும்
உன் கைபேசியை...

அதிகாலை முதல் சூரியன் மறையும்
அந்தி மாலை வரை
என் மனம் அழைகிறது
உன் முகம் தேடியே...

சொல்லாமல் சொன்னேன்
என் காதல் காவியத்தை உன்னிடம்
ஆனால் செயல் இழந்த செவி உடையால்
போல மொளனம் சாதித்தாய்...

நீ இருந்தால் என் வாழ்வே
பவுர்ணமி வானம் தான்
ஆனால் என் மனதுள் இருள்
வீசி எங்கே போனாயோ??

கண்ணை திறந்தே என்னை
கண்ணாம்பூச்சி ஆட வைத்தாய்
நான் உன்னை கண்டு பிடிக்கமுடியாமல்
இங்கு கண் கலங்கி நிற்கிறேன்

அன்பே, நீயில்லா வாழ்வு
ஓர் வாழ்வு அல்ல,
ஆருயிரே இந்த காதல்
நம் காதலாக உயிர்ந்தெழுவதும்
என் காதலாகவே சாவதும்
உன் கையில்..............
நான் காதல் சொல்ல வந்தேன்

எழுதியவர் : முரளிதரன் செங்கோடன் (31-May-13, 5:12 pm)
பார்வை : 117

மேலே