அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு (நூல் வெளியீட்டு விழா கவிதை)
அமெரிக்கா - வந்தேறியவர்களின் வளநாடு
(நூல் வெளியீட்டு விழா கவிதை)
எங்கள் அலுவலகத்தின் நிறுவன செயலாளர் திரு ஜெயப்ரகாசம் அவர்கள் (என்னுடைய தோழி திருமதி தமிழரசி அவர்களின் கணவர்) தன்னுடைய அமெரிக்க பயணம் குறித்த அனுபவங்களை பயணக் கட்டுரையாக தொகுத்து அதனை புத்தகமாக 24-05-2013 அன்று வெளியிட்டார். உயர் திரு ஏ.எல்.சோமையாஜி, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் அவர்கள் வெளியிட அதனை உயர் திரு கவிஞர் பொன்னடியான் அவர்கள் பெற்றுகொண்டார். அந்த விழாவில் பங்கு பெற்று பாராட்டுக் கவிதை வாசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. அந்த கவிதையினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அமெரிக்கா - வந்தேரியவர்களின் வளநாடு என்பது அந்த நூலின் பெயர்.
----------------------------------------------------------------------------
வெளிநாட்டு பயணத்தில்
இலட்சங்களாய் செலவழித்தீர்
கண்டறியா தேசங்களின்
கண்கவர் காட்சிகளை ரசித்தீர்
கிடைத்த உணவை
பசித்தபோது புசித்தே....
சில நேரம்
இயற்கை எழில் காட்சிகள்
உம் பசி தீர்த்ததும் உண்டு
உமது கண்களுக்கு
விருந்தானதும் உண்டு...
ஏங்கி நின்றோம் நாங்களும்தான்
இவ்வாய்ப்பு கிடைக்காதா??...
அயல் தேசம் செல்வோமா?? ..
அவ்வாசைதான் தீர்ப்போமா??
ஆசை இருந்தால் போதுமா??
ஆசை தீரத்தான்
ஆகும் நிதி வேண்டாமா??
கேள்வியிலே வாழ்ந்திருந்தோம்...
ஆசை வேள்வியிலே
வீழ்ந்திருந்தோம்...
தீர்த்து வைத்தீர் அய்யா
எம் ஆசைகளை
காசுபணம் கொடுத்தல்ல...
கொண்டு வந்தீர்
அயல் தேசங்களை
கொட்டி வைத்தீர்
உம் உணர்வுகளை
கையடக்க புத்தகத்தில்....
நீவீர் கண்டுவிட்ட தேசங்களின்
மனிதரோடு இயற்கையுமே
பண்பாடும் கலாச்சாரங்களும்
பண்பட்ட வரிகளால்
ரசனை எனும் தேன் கலந்து
சுவைக்கத் திகட்டா
தமிழமுதாய்.....
எங்களை இட்டுச் சென்றதைய்யா
நீவீர் கண்ட
அத்தனை தேசங்களும்
தேடியும் ஓடியும் கண்டதை
நாங்கள்
இருந்த இடத்திலேயே....
நீவீர்
இலட்சங்களில் பார்த்ததை
நாங்கள் சிக்கனத்தில்
பார்த்துய்தோம்..
நூறு ரூபாயில்
இத்தனை தேசங்களா??
எண்ணி வியக்கலாம்
எந்த நேரமும்
பயணிக்கலாம்....
நினைத்த நேரத்தில்
பிடித்த இடங்களுக்கு...
அமெரிக்க வளநாடும்
அங்கே குடியேறியவர்களும்
இனி எங்களின்
கைகளிலும்தான்....
நீவீர்
நிறைய தேசங்கள் கண்டு
இன்னும் நிறைவாய்
பயண நூல் வழங்கிட..
வாழ்த்துக்களுடன்....
சொ. சாந்தி.