வாழ்க்க சின்ன நேரம் ..

ஒருதுளி விந்தில் பிறந்துவிட்டோம்
ஓராயிரம் ஆசைகள் வளர்த்துபுட்டோம்
பாவகணக்கை வளச்சுகிட்டோம்
படைத்தவன் பார்ப்பதை மறந்துவிட்டோம்

செத்ததும் நாறுர உடம்புக்கு
சிங்காரம் செஞ்சே பழகிகிட்டோம்
வக்கிர புத்திய வளர்த்துகிட்டோம்
வாழ்க்க மூலம் தொலச்சுபுட்டோம்

காசுபண்ணும் கலை தெரிஞ்சா
கடவுளுன்னு கும்பிடுறோம்
முகத்துகொன்னு மனசுகொன்னு
முகமூடி போடுகிட்டோம்

ஒத்தநரம்பு சுருண்டுகிட்டா இவன்
ஒலகத்துக்கே பாரம்
பேர சேர்த்து வாழ்ந்துக்கடா
வாழ்க்க சின்ன நேரம்

எழுதியவர் : வரதராஜ் (2-Jun-13, 12:18 pm)
பார்வை : 87

மேலே