வேறு என்ன சொல்ல?
கிழித்து எறியப்படும்போது
காகிதத்தின் கண்ணீர்
ஒலியாக கசிகிறது
உள்வாங்கும் மனங்களற்ற
காதுகள் மோதி
அறியப்படாத வேதனைகளின்
வலைமுடிச்சுகளாக
தெருவெங்கும்
வீழ்ந்து கிடக்கின்றன
காகிதங்கள் கிழிக்கப்படுகின்றன
முடிச்சுகளின் நெருக்க வெக்கையில்
மனம் வாந்தியாகிறது.
--------------