காதல் காலம் மாறியது - சி.எம்.ஜேசு

என் கண்மணி அவள்
கனிமொழி இதழுடையாள்
கனங்குழை செவியுடையாள்
மறைந்தே என்னில் நிறைந்து
வாழ்பவள் - நான்

இறந்தே விடுவேனாகில் - என்
காதலியோடு தான் என்று
எண்ணியக் காலங்கள்
மறைந்தது

காதலிச் சென்றால் வேறொருவர்
வாழ்விற்கு - காதல்
மட்டும் எனக்கிருந்து
கருதொருமித்த வாழ்வைத் தந்தது

காதலால் இறவாமல்
காதலால் மறையாமல்
காதலே வாழ்வென்று மாற்றி
சாதனைச் செய்ததென ஆயிற்று

எழுதியவர் : சி.எம்.ஜேசு (3-Jun-13, 1:14 pm)
பார்வை : 123

மேலே