மரணமே நியாயமான விலை
![](https://eluthu.com/images/loading.gif)
ஆயிரம் பிரசவ வலியை
சுமந்து கொண்டு வாழ்கிறேன்
உந்தன் பிரிவில்
எல்லாம் இருக்கும் உலகை
ஒன்றுமில்லா உலகை காண்கிறேன்
எந்தன் நிழலும் நிஜமும்
என்னை விட்டு எங்கோ போய்விட்டது
நிஜத்தில் வாழ்ந்தாலும்
உன் நினைவை தேடியே அழைக்கிறேன்
என் நிழலாய் நீ இருந்த போது
என் நிழலைகூட நான் பார்த்ததில்லை
உந்தன் பிரிவு எனக்கு
என் நிழலை மட்டுமே விட்டு வைத்துள்ளது
உணவும் ,பானமும்
நாம் உயிர் வாழத்தான்
உயிரற்ற இந்த நடபினத்திற்கு
இப்போது அவை என்னத்திற்கு
சுவாசம் இன்றி அமையாததுதான்
என் சுவாசக்காற்றே
என்னை விட்டு பிரிந்தபின்
இந்த சுவாசம் என்னத்திற்கு
மரணம் என்னை வந்து சேர்வதையே
என் மோட்சமாய்
இப்போது காண்கிறேன்
என் விமோட்சனமாய்
உந்தன் கரம் என்னை தீண்டாதவரை
என் மரணமே எனக்கு நீ தரும்
நியாயமான விலை உன் பிரிவுக்கு