Pooripu

புலரும்
காலை பொழுதின்
பூங்குயில் ராகம் போல்

புது மழை
பூமியில் பட்டவுடன்
புரண்டு வரும்
மண் வாசம் போல்

தென்றலோடு
தவழ்ந்து வந்து
தழுவி விட்டு போகும்
பூவாசம் போல்

பெண்ணே
உன் பூவிழி
பார்வை பட்டவுடன்
பூரித்து போகுதே
எந்தன் உள்ளம்

காலை வணக்கங்கள்
என் கவிக் கண்ணே

எழுதியவர் : Prabha (17-Apr-10, 2:07 pm)
பார்வை : 819

மேலே