கண்கள்
பார்பதற்காக இறைவன் படைத்த
கருத்தான கருவி இது
காலத்தின் கோலத்தை
விதியின் விளையாட்டை
இதயம் உணரும் போது
இமைபொழுதில் கட்டுகின்ற
இனிமையான பிம்பம் இது
வேதனையோ வேடிக்கையோ
சிரிப்போ சிலிர்ப்போ
அழுகையோ ஆனந்தமோ
வெறுப்போ வெறுமையோ
வெட்கமோ வெகுளிதனமோ
ஆத்திரமோ ஆற்றமையோ
பொறுமையோ பொல்லாத குணமோ
கோபமோ கோமாளிதனமோ
பயமோ பாசமோ
பிரிவோ பிரியமோ
பணிவோ பாசாங்கோ
இன்னும் எத்தனை எத்தனையோ
உணர்வுகளை
எடுத்துக்காட்டும் உடலின் உயிர்நாடி
இந்த கண்கள்தான்