தோல்வி கண்டே துவண்டு விடாதே
தோல்வி தோளில் கைபோட்டது
துவண்டு விடாது சிரித்திருந்தேன்.....
நண்பா என் பெயர் மாற்றி விட்டேன்
நான் இப்போது வெற்றி என்றது
தூக்கிக் கொண்டேன் இடுப்பின் மேலே
தூய மழலையென வெற்றி நம்பிக்கை....!
அகங்காரம் மழலை அறியாது
அது அழகாய் சிரிக்கும் புது முல்லை....!