இனிப்பாகும் வாழும் கலை!

மோசடி செய்வதில்
***போட்டிகள் வைத்திட்டால்
மோதல் செய்ய இங்கு
***மேதைகள் பலருண்டு!

உதவிகள் செய்திட
***ஊன்றுகோல் ஆகிட
உள்ளோரும் இங்குண்டோ
***உற்றாரும் ஓடிடுவர்!

பத்திரிக்கை செய்திகளில்
***பற்களை இழித்துக்கொண்டு
மோசடி பேர்வழியே
***முதலிடத்தை பிடித்திடுவர்!

உழைப்பாளி வர்க்கமும்
***உண்மைக்காய் உழைப்போரும்
உருவின்று போயிடுவர்
***உண்மையில்லா உலகத்திலே

பொறுப்புகளை மறந்திட்டு
***பொழுதுகளை கழித்திட்டு
பழுதான வாழ்க்கையினை
***பலபேரும் வாழுகிறோம்!

இதுவல்ல வாழ்க்கையென
***இனியேனும் உணர்ந்திட்டால்
இனிப்பாகும் வாழும்கலை!
***இசையாகும் வாழ்க்கைமுறை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-13, 1:49 pm)
பார்வை : 88

மேலே