வாய்மையே வெல்லும் என்பது சரியானதுதானா?

வாய்மையே வெல்லும் என்பது சரியானதுதானா?
இப்படியொரு கேள்வி என்னுள் பலநாள் சுனாமிப் பேரலையாய் எழுவதுண்டு...
ஆனால் போலிச் சுனாமியாக எழுந்த வேகத்தில் வீழ்ந்துவிடும் மீண்டும் மீண்டும் எழும்...விழும்..
இதற்கொரு முடிவே இல்லை...?

வாயில் புகைப்பானுடன் சேகுவேரா பணியனைப்ப் போட்டுக்கொண்டு ஒரு தேநீர் கடையில் புகைத்துக்கொண்டு நின்றான் ஒரு வாலிபன்...

அட..இந்திய வாலிபனுக்கு சேகுவேரா அத்துபடியோ...? என்று வியந்து வினாவிய போது..அவன் சொன்ன பதில் சொங்கித்தனமாக....

"அவருக்கு பில்ட்டர் கோல்ட் ப்ளேக் சிகரெட் ரொம்பப் பிடிக்குமாம்...எனக்கும் பிடிக்கும் அதே சிகரெட்.."

அப்புறம் கவனித்ததில் சேகுவேரா படம் போட்ட அந்தப் பனியனில் இருந்தது...ITC விளம்பரம்...

அப்படித்தான் இருக்கு இன்று இந்தியாவில் அரசு அலுவலகங்கள்..நீதி மன்றங்கள்..அத்தனை இடங்களிலும் பல்வேறு மொழிகளில்...பல்வேறு வடிவங்களில் வாய்மையே வெல்லும் என்ற வாசகம்

ஒருமுறை ஒரு நீதிமன்றத்திற்கு நண்பருடன் சென்றிருந்தேன் அங்கே நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கைப்பார்க்க....

சில வழக்குகளின் தீர்ப்புகளை நேரில் கண்டேன்...நெஞ்சு வெடித்து விடும் நிலை.....தீர்ப்புகள் விற்கப்படுகின்றன

நீதி மன்றங்களே இப்படியென்றால் அரசு அலுவலகங்கள் எப்படி இருக்கும்....?

அதையும் நான் சொல்லத்தான் வேண்டுமோ...? தினசரி நாளிதழ்களைப் புரட்டுங்கள் எல்லாம் புரியும்.....

என்னைப்பொருத்த மட்டில் கடவுள் என்று ஒருவர் ஆதீத சக்தியுடன் உருவாக்கப்பட்டு...
ஆன்மீகவாதிகளால் எப்படி அப்பாவி மக்கள் எமாற்றப்படுகிரார்களோ.....
அப்படித்தான் வாய்மையே வெல்லும் என்று ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டு சமுதாயத்தில் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் .யோக்கியம் பாக்கியம் அயோக்கியனுக்கு
எழுத்து தளத்தில் கேள்வி-பதில் பகுதியில் நான்
இந்தக் கேள்வியை சமர்பித்ததும் நிறைய நண்பர்கள் கருத்திட்டார்கள் அவர்களுக்கும் இந்த வாய்ப்பைத் தந்த எழுத்து தளத்துக்கும் நன்றி.....

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (5-Jun-13, 3:56 pm)
பார்வை : 2188

மேலே