உன் கவிதையின் தேடல் ???????????

மனதின் வார்த்தையெல்லாம்
கவிதையாய் உருவெடுத்தால்
ரசிக்கும் மனமெல்லாம்
கொஞ்சம் காயம் கொள்ளும்

மனகாயத்தை குறைக்க எண்ணி
சிறிது பொய் கலந்தால்
கவிதை கற்பு உடைந்து விடும்
அதன் வீரியம் குறைந்து விடும்

இருப்பதை இருப்பதுவாய்
கொஞ்சமும் மாறாமல்
அழகை கூட்டாமல்
அப்படியே சொல்லி பார்
கவிதை தானாய் அழகு பெறும்

எங்கே தேடுகிறாய்
எதிலே தேடுகிறாய்
உரக்க சொல்லிட ஒரு கவிதை

உன்னை சுற்றிபார்
உலகமே ஒரு கவிதை
அதனை தாண்டி ஒரு கவிதை ஏதுமில்லை
தேடினாலும் கிடைப்பதில்லை

எழுதியவர் : ருத்ரன் (5-Jun-13, 4:07 pm)
பார்வை : 143

மேலே