இளம் பொழில் உனை

அனுதினம் நினை
மனம் ஒரு சுனை

அந்திப் பந்தலில்
ஐவிரல் ஆறடி
கார் முகில் கோதிட
புருவம் உயர்ந்து
பூங்கண் திறந்து
பூவிதழ் பிரிந்து
எனை சாய்த்து
ஒழி வீசி
காதல் மொழிபேசி
வலை வீசி
மருண்ட உன் விழி கண்டு
கழியுண்டு
பீறிட்டது சுனை
அதை தந்தக் கை கொண்டு அணை

பாறை மனம் மாற்றி
தேரையெனை வெளியேற்றி
பாவை இவள் காட்டிய
பாதை இனி கீதை

அனுதினம் நினை
மனம் ஒரு சுனை

எழுதியவர் : Nanjappan (5-Jun-13, 8:40 pm)
சேர்த்தது : நஞ்சப்பன்
பார்வை : 64

மேலே