அன்புள்ள அப்பா
தற்காலிக உறவுகள் தான்
செய்தவற்றை தற்பெருமை அடித்து கொள்ளும்
எத்தனையோ செய்த தந்தை எதையாவது
சொல்லியதுண்டா இதுவரை ?
அன்பை அம்மா கண்ணீரால் காட்டுவாள்
அதை வெளிப்படுத்த தெரியாத மனிதன் இவன்
யாருக்கும் தெரியாமல் நம் ரசிகன் இவன்
நம் சிரிப்பிற்காய் பின்னால்
தான் உணர்சிகளை சிதைத்தவன்
எளிதாய் பிரிந்து விடும் உறவுகளுக்காய் எத்தனை செய்கிறோம்
நமக்காய் நிரந்தரமாய் வாழ்பவருக்காய் என்ன செய்தோம் ????