அப்பாக்கள் தேசத்தில்....

மீசையை போலவே
முரட்டுத்தனமான
அன்பு இருக்குமிடம் அப்பா...!

ஆடி விளையாட
பிள்ளைகளுக்கு ஆசை
ஆலம் விழுதாய் அப்பாக்கள் மீசை...!

அப்பாக்கள் தேசத்தில்
அம்மாக்களும் குழந்தைகளே...!

நிலாவை இரசிக்கிறோம்;
சூரியனை இரசிப்பதில்லை,
அதுபோல் தான்
அப்பாவையும்....!

அப்பாக்களுக்கு வயசாவதில்லை
பிள்ளைகள் அவரைவிட்டு
விலகிப்போகாதவரை...!

எழுதியவர் : மீனாட்சி.பாபு (6-Jun-13, 9:36 am)
சேர்த்தது : மீனாட்சி.பாபு
பார்வை : 61

மேலே