என்னவள் எனக்கானவள் ................

என் பகல்கள் எல்லாமே
அவளின் கண்ணசைவில்
என் கனவுகள் எல்லாமே
அவளின் வார்த்தைகளில்
இன்னொரு தாய்மடி கண்டேன்
அவளின் பாசத்தில்
குழந்தையின் உளறல் கண்டேன்
அவளின் தூக்கத்தில்

பூக்கள் தூவி
பிஞ்சுப் பாதம் நடந்து
சில நேரம் சிணுங்கி
பல நேரம் ஒற்றை ரோஜா
அவள் சிரிக்கையில்
மரணம் நான் தொடுவேன் என்றால்
எனக்கு எமனும் அவளே ..........

எழுதியவர் : ருத்ரன் (6-Jun-13, 1:00 pm)
பார்வை : 1429

மேலே