தமிழகத்தில் மாவோஸ்ட்கள் நடமாட்டம் - எச்சரிக்கும் ராம.கோபாலன்...! ஏன் பதறுகிறது இந்து முன்னணி...?

தமிழகத்தில் நக்சல்பாரி மாவோஸ்ட் இயக்கத்தின் செயல்பாடுகள் இல்லை என்று காவல் துறையை சேர்ந்த சில அதிகாரிகள் திரும்பத் திரும்ப சொல்லி வருவது தமிழக அரசையும், மக்களையும் திசை திருப்பும் செயலோ என சந்தேகம் வருகிறது.

சமீபத்தில் இந்து முன்னணி ஒரு குழு அமைத்து விசாரித்ததில் பெரியகுளம், கொடைக்கானல்,வருசநாடு உள்காடு, திண்டுக்கல்,தேனி, அரியலூர், மதுரை, கடலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், காங்கேயம், வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் வெளிப்படையாக நக்சல்பாரி செயல்படுவது தெரிய வந்துள்ளது.

தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளின் தலைமையில் பத்திரிக்கையாளர்கள், தேசபக்தர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து நேர்மையாக நக்சல்பாரிகள் நடமாட்டம் குறித்து விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ராம.கோபாலன் அவர்கள்.

மேற்கண்ட மாவட்டங்களில் இடது சாரிகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. புதிய ஜனநாயகம் மற்றும் பெ.மணியரசன் அவர்களின் தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி, குளத்தூர் மணி அவர்களின் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி இவை போக ஆயுதம் இல்லா எம்.எல். கட்சிகள் இயங்கி வருகின்றன. இந்த அணைத்து கட்சிகளும் மதவாத இயக்கங்களை, மத வெறியை பரப்பும் இந்து முன்னணி போன்ற கட்சிகளை எதிர்த்து இயங்கி வருகின்றன.

தமிழக மக்கள் குறிப்பாக வீதிக்கு வீதி ஏன் கோவில் வேண்டும்..? நல்ல கக்கூசு வேண்டும் என்று போராட கருத்து சொல்ல ஆரம்பித்து விட்ட நிலையில் தான் ராம.கோபாலன் அவர்களின் இந்த எச்சரிக்கை ஓலம்...!

எங்கே இவர்கள் வளர்ந்து விட்டால் நாம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியாதே என்ற அடிவயிற்று எரிச்சலில் இவ்வாறு கூப்பாடு போடுகிறார் ராம.கோபாலன் அவர்கள் என்று கருதலாமா...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Jun-13, 12:17 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே