கண்ணீர் கவிதை
வருவானா அவன்..
பிறை நிலா நெற்றியில் செந்தூரமிட......
சங்கு வண்ண கழுத்திலே மாலையிட....
கைகளிலே வளையலிட....
கால்களிலே மெட்டியிட...
சுமங்கலி என்ற பட்டம் தர.....
எதிர் வீட்டு பெண்ணின் கவிதையை வாசித்த போது வந்த சிரிப்பு-
அவளொரு விதவை என்று அறிந்ததும் விழியோரத்தில் துளியாய் மாறியது.....