ஒற்றுமை
நமக்குள்ளேயே
பிரிவுகள் இருப்பது
புரிந்து போயிற்று அவர்களுக்கு !!!
எமக்குள் இருந்த
ஒற்றுமையின் உயிர்
ஊசலாடுவதும்
தெரிந்து போயிற்று அவர்களுக்கு
ஆட்டுக் குட்டி நனைகிறதென்று
நரி சொல்லும் கதைகேட்டு
நீலிக்கண்ணீர் வடித்து
தலைக்கறி சாப்பிட மட்டுமே
தெரியும் நம்மில் பலருக்கு
நஞ்சையும் அமுதென்று
விழுங்கி விட்டு
குரல் கொடுக்க வேண்டியவர்கள்
குப்புற விழுந்து
குட்டித்தூக்கம் போடுகையில்
எங்கோ ஒரு மூலையில்
அடாவடிகளை
எதிர்நோக்க சக்தியின்றி
அர்ச்சனைகளில் ஈடுபடும்
அடித்தட்டு
பலஹீனப் பாவைகள் தான் பாவம்
கடைசியில்
போதி மரத்தடியில்
புத்தருக்கு
ஞானம் பிறந்ததோ இல்லையோ
புத்தசாசனம்
படிப்பவருக்கு அஞ்சானம்
பிறப்பது தான் உண்மை
பூனைக்கு மணி கட்ட வேணுமாம்
பாவம் ....
அதை யார் கட்டுவதென்று
இன்னும் தெரியவில்லை
எம்மைப்போல
அற்ப எலிகளுக்கும் !!!!
புத்தசாசனம்