தலைவிரி கோலம்
பிள்ளையையும் கிள்ளி
தொட்டிலையும் ஆட்டி
பெருந்தன்மையை தேடும்
பொருத்தமற்ற செயல்
ஆளுலகம் அழகில்லை
அவனிதனில் எவனுமில்லை
தன் புற்கொடி ஒன்றே
போர்க்கொடியாக பூரிப்பில்
*******************************************
சோதனைக்குள் சுதந்திரமாய்
திரியவிட்டதால் சோதனை
சாதனையாகுமோ என்று
வேதனையில் விஸ்வரூபம்மெடுத்து
தனதென்று தம்பட்டம் அடித்துக் கொண்டது......
**********************************************
பாருக்கும், ஊருக்கும் தெரியும்
புகழும் புத்தியும் யாருக்குத் தேவையென்று
பொறி கலங்கி விட்டதற்காக
புடம்போட புகழுரை தேவையில்லை
தன்புத்தி இருந்தாலே போதும்
வலம்வரலாம் வள்ளலாக
இருப்பவரெல்லாம் ஏமாளிகள் இல்லை
ஏகபோக வாழ்வை விரும்ப ..............
***************************************************
களம் கண்ட வீரர்களுக்கே
கிலி ஏற்படுத்தும் கருநாகக் கூட்டம்
கைகோர்த்தால் பயம் வரத்தான் செய்யும்
மதம் பிடித்த களிறென்றால்
கையும் காலும் நடுங்கத்தான் செய்யும்
பாகனென்ன பக்தனுக்கும் தான்
பொய்யுரையிலும் போற்றுரையிலும்
வளர்வது யாரென்று வானம்பாடி
வந்து சொல்ல தேவையில்லை ......
*******************************************************
புத்தி சொல்லும் நோக்கமிருந்தால்
புனிதத்தன்மையை உடுத்திக் கொண்டு
தனதென்ற நிலையகற்றி நாமமென்று
நிதானித்து நிதர்சனத்தையும்
தரம் கொண்டு பகிருவோம்
தன்மானமற்ற தரங்கெட்ட செயலை
போர்வைப் போர்த்தி செய்யவேண்டாம்
மூழ்கடிக்காதீர் மூத்தோர் சொல்
முனிவர் சொல் என்ற பழம் பெருமையை ..........
*******************************************************
கோபம் கூடதணலில் விழுந்த
புழுவாக துடித்து தணிந்துவிடும்
கோபத்தின் காரணமோ குன்றின்
மேலிட்டவிளக்காகும் என்பது
இங்கே யதார்த்தமான உண்மை
புரியவிரும்பினால் உற்று நோக்குங்கள்
உண்மை உறங்கிக் கிடக்கிறது
பொய்யோ சிலிர்த்துக்
கொண்டு சீட்டியடிக்கிறது
**********************************************************
தராசின் தரம் இருபக்க சமம்
இங்கே ஒருபக்கம் சாய்ந்து
எடைபோட்டு பொருளிலே
குறை காண்பது எந்த விதத்தில் நியாயம்
பொருளிலே குறையிருக்கலாம்
தராசு ஒருபக்கம் சாய்வது
காலத்தின் கோலமோ
பிறரை குறை கூறுமுன் தன்னிலையை
சரிபடுத்துவோம் , அதே தவறை தான்
செய்வதில்லை என்று
******************************************************
படைப்பவனெல்லாம் படைப்பாளி
குடிப்பவனெல்லாம் குடிகாரன்
மனநோயாளி என்பவனெல்லாம் மனநோயாளி
இவர்களுக்கு வைத்தியம் பார்ப்பவர்களை
மட்டும் இங்கே வைத்தியனாக ஏற்ப்பதில்லை
நல்லநாடகம் நடத்துங்கள்...........
*********************************************************
உடன்படுபவர்களுக்கு மட்டுமே
உறுதுணையாய் இருப்பேன்
அவர்களின் சாத்தான் செயல்
படைப்பாளிக்கே உரியது என்று
மனப்பால் குடிப்பது நியாயமோ?
திருத்த வேண்டியவர்களே
திருட்டுத்தனம் கற்பிப்பது
எவ்விதத்தில் நியாயம்?
**************************************************
பெருமைக்காகவும் பீற்றலுக்காகவும்
அடுத்தவர்சாடி தோழமை வருடுவதைவிட்டு
மற்றவரை கைகாட்டி படையல் இட்டால்
உண்பது உங்களின் உற்ற தோழரே
உதவாக்கரை எண்ணம் கொண்ட
பேசும் உதட்டை அறுத்தெறியுங்கள் ...........
******************************************************
நானே என்ற டாம்பீகத்திற்க்காக
டமாரம் அடிக்கும் டப்பாக்களை
காலினால் நசுக்கி கடாசி எறியுங்கள்
சினத்தை சிரசினில் கொண்டு அலைவது
காலில் மிதித்தை கையால் எடுத்து
முகர்வதற்க்கு சமமாகும் .....................
**************************************************
உற்ற படைப்பாளி என்று உள்ளே வந்தால்
உறுத்தும் வார்த்தைகள் உள்ளுக்குள்ளே
உணர்த்தியும் விட்டீர் போக புலமையென்று
நீங்கள் ஒதுக்குமுன் உண்மையை
உணர்ந்தே ஒதுங்கி விட்டோம்
தேவையில்லை மதம்பிடித்த
மண்ணாங்கட்டிச் செயல்
படித்தென்ன பலனென்று............
************************************************