மௌனநீர்வீழ்ச்சி

என்மௌனங்களும் துக்கங்களும்
உன்னால் உருவானதா?
ஆச்சரியமாய் இருக்கிறது
மௌனிக்கவைத்து விட்டாய்
மனதை சோர்வடையச்செய்துவிட்டாய்
எதுவுமேபுதிதாக வென்றுவிடுவதில்லை
துளித்துளியாய்....ஊற்றெடுத்து
ஒருசேர வீழ்வதுதான் நீர்விழ்ச்சி
எண்ணங்களும் அப்படித்தானே...
ஏனோ இப்பொழுதுதான் தெரிகிறது
படிக்காமல் தேர்வெழுதும் மாணவியாய்!

எழுதியவர் : விஜி (9-Jun-13, 6:52 am)
பார்வை : 110

மேலே