விடைதேடி

ஏனடா கண்ணா?
என் உள்ளம் எதிர்பார்த்து
மௌனமாய் வலிக்கிறது
மெல்லிய சலனங்கள் அன்றி
அழுத்தமான நிகழ்வுகளாய்
ஒவ்வொரு காட்சியும்
ஊனமாய் உணர்கிறேன்
எனக்களித்த பாதையில்
ஏனோவென்று நடந்திட்டு
எதிர்திசை நோக்கி நான்
சிலசமயம் சிந்தனையில்
சித்தப்பிரமையாய்..
சிங்காரநினைவுகள் சிதறிட்டு...
காட்டாற்று வெள்ளக்கரை
காய்ந்த்திட்டு பாலையானதுபோல்
என்ன செய்ய ...நான்
என் காதில் கூறிவிடு
வழிவந்து விடைகேட்கிறேன்
வாழ்வில் யாவும் அநித்தியமாய்
உன்னிடமே உரைத்திட்டு
உன்னிடமே உயிர்விட்டு
வரையரை தேடும் வாழ்வாய்.....
யாவுமே எனக்கு யாசகம் ஆகிவிட்டதா?
கண்ணா எனை
காணமல் செய்து விடு
நான்
காதலிக்கிறேன் ...உண்மை.