திரவியத் தேடல்

திரவியத் தேடல்

தென்றல் கண்டு
இனைசூழ இருக்கும் மலர்கேணம்
சோனை தழுவிடாதா என்று

அங்கண் இரசித்திடும்
அகத்துள் துளி உறையல்
அணலோடு மிகுந்த உன்னல்

ஏணையின் மழம்போல்
துழாவிடும் எண்ணங்கள்,,,
மீண்டுமோர் அன்னையின் மூழியை

சுணை குறைந்து முணை மிகுந்து
கினி படர்ந்து எழும்பிடும்
இடுக்கண் வணம்

மூளைக்கும் நாசிக்குமாய்
நடந்தேறும் துனி

ஈறல் குறைந்து
வழப்பம் மறந்திடச்செய்யும்
மாளியாய் குவிந்திட்ட பழங்கதைகள்

கோலையாய் எரித்திடும் இரகு
தேடலில் கிட்டிடாத தானி
புன்வயிறோடு அறா அழிபசிபுண்

கண்டிராத நாளில்
நெடுஞ்சாலைக் கடலாய்
கானல் மாழை

வளியோடு மிதந்திடும்
வள்ளமன்ன பயணம்

அகப்பட்ட ஆரலாய் ஆயுள்,,,
ஆவி அறுகியது போல்
ஆர்ந்த அறுமை சிந்தனை

ஒளிரும் தகழி
ஓய்ந்திடும் நேரம்
திகழ்சியின் புனைவு

சகடம்போன போக்கில்
மிடிமைகள் மறைந்து
தொலைத்தவை திரும்பிடாதா

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (9-Jun-13, 8:55 am)
பார்வை : 144

மேலே