உலகின் எழில் சிறக்க...
இனிதாய் இசைக்கும்
குயில்
ஆடலில் வல்ல
மகிழ்வே கொண்ட மயில்
நீந்தி நிதம் மகிழும்
மீனினம்
காற்றசைவில்
பூச்சொரிய சிலிர்க்கும்
மரக்கிளைகள்
கொள்கை மாறாதென்றும்
அதிகாலை கூவுதலே
கடனாய் கொண்ட சேவல்
வண்ணம் அமைத்து
தினம் பூத்து மகிழும்
பூமரங்கள்
மழை வெள்ளம்
பள்ளம் நிரப்ப
இராக் கத்தும் தவளை
குடை விரிக்கும் காளான்
இடைப் பிற வரலின்றி
தொடர் அணி வகுக்கும்
எறும்பினம்
நிறை பொருளாதார
வளம் பொருந்திய
வானுயர் பனை....
இவ்வாறுலகில் இவ்வாறுலகில்
உலகத்தியற்கை
எழில் சிறக்க
மனிதப் பங்களிப்பு
நிகழ்தல் எங்ஙனம்
நிகழ்தல் எங்ஙனம்!
அழ.பகீரதன்
இக்கவிதை 1990 இல் வெளிவந்த காலைக்கதிர் உறுட்டெழுத்திதழில் இடம்பெற்றது