நாளை படப்போகும் ..!!!

இறப்பு ஒரு கொடுமைதான்
ஆனால் இறக்காமல் -உலகில்
யாரிப்பர் ....???

இறப்பின் போது அழுவது
இயற்கைதான் -ஆனால்
அழுததால் மீண்டவர் யார் ...???

இறந்தவரை நினைப்பது
கவலைதான் -ஆனால்
நினைத்ததால் -மீண்டும்
சிரித்தவர் உண்டோ ...???

பட்டுப்போன மரத்தை
நாளை படப்போகும்
மரங்கள் தூக்குவதே -பாடை

செத்துப்போன உடலுக்கு
நாளை சாகப்போகும் -உடல்
போடுவதே -கூச்சல்
பட்டினத்தார் ஒன்றும்
சும்மா கூச்சலிடவில்லை
மனிதா ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jun-13, 7:00 am)
பார்வை : 84

மேலே