வலிகள்
(முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு தாயின் கவிதை)
இப்பொழுதெல்லாம்
நான் நிலவை பார்ப்பதேயில்லை .
நான் நிலவை பார்ப்பதேயில்லை .
எனக்கு கழுத்து வலிக்கும்
என்பதற்காக அல்ல !
என் இடுப்பில் அமர்த்தி உணவூட்டிய
என் மகனின் நினைவுகள் வந்து
என் இதயம் வலிக்கும் என்பதற்காக!
இப்பொழுதெல்லாம்
நான் நிலவை பார்ப்பதேயில்லை .
நான் நிலவை பார்ப்பதேயில்லை .
"கேட்டதில் பிடித்தது(வலித்தது) "