நாகரீக வளர்ச்சி வரமா ? சாபமா ?

வெக்கத்தில் தலைகுனிந்து
பக்கத்தில் நிற்கும் ஆண்களை கூட
ஏறெடுத்து பார்க்காது
இருந்திருந்தார் பெண்கள் அன்று ............

பாதுகாப்பு கருதியே வீடு வாசல் தாண்டாமல்
பெற்றவர்கள் சொல்கேட்டு
உற்றவழி நடந்துவந்தார் பெண்கள்
தந்தை நிழலில் தஞ்சம் புகுந்தார் ..............

உலகத்தின் போக்கை தெரிந்து
உடல்மறைக்க ஆடைகட்டி
கர்ப்பை காத்துவந்தார் பெண்கள்
காலையரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தார் ..............

கல்யாணம் முதலில் தோன்றும்
காதல் பிறகே தோன்றும் ,
பாதுகாப்பான காதல் கொண்டார்
பாசபினைப்போடு வாழ்ந்து மடிந்தார் ...............

இன்று , நாகரீக வாழ்க்கையில்
பெண்கள் எல்லாம் ஆண்கள்போல் சுற்ற
நண்பர்கூட்டம் வளருது
நாளுக்குநாள் பிரச்சனையும் தொடருது ............

நாகரீக உடைகள் எல்லாம்
அசிங்கமாக அலைந்துகொண்டிருக்கிறது சாலையில் மறைத்து காக்கவேண்டிய அந்தரங்கம்
தெருவில் வெளிச்சமாக திரையிடப்படுகிறது ......

உள்ளாடையோடு சுற்றும்
உல்லாச வாழ்க்கையில்
உரசல்களும் இருக்கும்
உளைச்சல்களும் பெருகும் .............

எல்லைதாண்டும் இளசுகள் செயலால்
வீடுதேடுது பிரச்சனைகள் தினமும்
கர்ப்பை தொலைக்கும் பெண்களாலே
உயிரை துளைக்கும் பெற்றவர்கள் நிறைய ......

மாதிடம் மயங்கும் ஆண்கள் உண்டு
மதுவில் மயங்கும் பெண்களும் உண்டு
ஒழுக்கம் இங்கே எங்கே இருக்கும்
போதையில் அலையும் உலகம் இதிலே ........

ஒழுக்கம் துளைக்கும் நாகரீக பயணம்
ஓட்டல் டான்சும் டேட்டிங் சுற்றலும்
அழிவுப்பாதைக்கு வழியே தவிர
ஆக்கத்திற்கு உதவபோவதில்லை ....................

செல்போன் பேசும் இன்டர்நெட் மூச்சும்
இன்றைய காலத்தில் இன்றியமையாததாய் போச்சு
கலாசாரஅழிவுக்கு காரணம் இதுவே
பெண்கள் கலவாடபடுவதர்க்கும் காரணம் இதுவே .

நாகரீகம் மாற்றம் சாபமே தவிர
வரம் என்பது அதிலே இல்லை
பேனிக்காப்போம் நமது கலாசாரத்தை
ஒதுக்கி வைப்போம் நாகரீகத்தை ..............

எழுதியவர் : வினாயகமுருகன் (9-Jun-13, 11:11 am)
பார்வை : 486

மேலே