" சிறந்த படைப்புகள்" நாள்- 07/06/2013 **** ஆவாரம் பூ****
இத்தள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்....
07/06/2013 அன்று வெளியான படைப்புகளுள் சிறந்த கவிதைகளை தேர்வு செய்து நடுவர் அளித்துள்ளார்...
அவை...
1.எதற்கு ஒரு மாதர் கூட்டம் - Nanjappan
2.2.சங்கம் ! அது பங்கம் ! கொ.பெ.பி.அய்யா.
3.இதோ இவள் இறந்து விட்டாள்..... ரஞ்சிதா
===========================================
1.எதற்கு ஒரு மாதர் கூட்டம் - Nanjappan
கருவானவுடன் கலைத்தெரிய
முளைவிட்டவுடன் கிள்ளியெறிய
முனைப்போடு அலையும் ஒரு கூட்டம்
தப்பிப்பிறந்தால்
எட்டிப்பார்க்காத அப்பா
தள்ளி நிற்கும் பாட்டி
கில்லி நகைக்கும் ஒரு கூட்டம்
பச்சிளம் பால் முதல்
முத்தழகு வரை
கசக்கி ஏறிய காத்திருக்கும் ஒரு கூட்டம்
பள்ளி அனுப்புகையில் பாகுபாடு
பள்ளி வகுப்பறையிலும் அதே பாடு
பள்ளி செல்லும் பாதையிலே எனை
அள்ளிச் செல்லும் அரக்கர்கள்
பேருந்தில் செல்கையிலே எனை
கிள்ளிச் செல்லும் கயவர்கள்
நடந்து செல்கையிலே எனை
எள்ளிச்செல்லும் நரிகள் கூட்டம்
பூப்பெய்தவுடன் பருவமங்கை
புன்னகைத்தலோ இன்னும் தொல்லை
மாமன் வரவு மகிழ்ச்சியில் செலவு
மாலை மஞ்சள் மேளம் தோரணம்
ஆடு தேடி அறிவிக்கும் ஒரு கூட்டம்
சந்தையிட்டதும் பலியிட
தந்தை தாய் சகிதம் வரும்
விந்தை மனிதர்கள் ஒரு கூட்டம்
சந்தையிலே
பெண் வங்கி தேடும்
மற்றொரு கூட்டம்
விலை போனபின்
தலை முழுகிய பெற்றோர்
தலைமுறை வேண்டும் உற்றோர்
பல கனவுகள் பகல் கனவுகள்
சில இரவுகள் சிவ இரவுகள்
வயிற்றிலே புது வரவுகள்
வரவுகளைச் சோதிக்க மீண்டும் ஒரு கூட்டம்
மரணம் கண்டு மீண்ட ஜனனம்
விடை தெரியா மறு ஜனனம்
வாரிசுக்கொண்டாட்டம்
என் ஜென்மமெனின்
மீண்டுமொரு திண்டாட்டம்
இதிலும் திருப்தியுறா ஒரு கூட்டம்
அம்மா என் கண்ணம்மா
சின்னம்மா என் பொன்னம்மா
இது ஆரம்பம்
அம்மா என் தொல்லை
சாவு ஏன் வரலை என
ஏமாற்றும் ரத்தக் கூட்டம்
நான் பெற்ற கூட்டம்
முதியோர் காப்பகம்
நாள்தோறும் பிள்ளைகள் ஞாபகம்
அசை போடும் பழைய ஞாபகம்
மீண்டும் ஒரு புதுக் கூட்டம்
ஒரு புறம் ஸ்ரீதேவி
மறுபுறம் மூதேவி
ஒரு புறம் பால் அபிஷேகம்
மறுபுறம் அமில அபிஷேகம
இத்தனை கூட்டங்களுக்கு நடுவில்
என்னைப்போன்று
தன்னை வெறுத்து
மண்ணைப்பார்த்து நடக்க
எதற்க்கு ஒரு மாதர் கூட்டம்
கருக் கலைப்பவர்களை விட
வெறுக்கிறோம் இறைவா அந்த
கரு அளிக்கும் உங்கள் கூட்டம்
===========================================
2.சங்கம் ! அது பங்கம் ! -கொ.பெ.பி.அய்யா.
விலை மகளெல்லாம்
கலை மகளென்றே
தலைவிதி மாறும்
நிலைமை ஆகும்!
ஆணும் ஆணும்
காமம் பழகும்
அனுமதி விதியும்
அவசரம் ஆகும்!
தேவை கருதும்
திருடுங்கூட
பாவம் விலகும்
பாதுகாப்பாகும்!
கொலைகள் புரியும்
கொடூரங்கூட
நிலைமைகள் கூறி
நியாயங்களாகும்!.
சங்கம் அமைத்து
சண்டைக்கு நின்றால்
பங்கம் எதுவும்
அங்கீகாரம் ஆகும்!
அரசியலமைத்து
எதுவும் செய்வார்
உரசிப் பார்த்தால்
ஊரையும் எரிப்பார்!
அமைப்பு ஒன்றில்
அமைந்தால் போதும்.
கடையும் விடமும்
கலந்தால் அமிர்தம்!
சட்டங்கள் வளைந்து
சண்டைக்குப் பயந்தால்
குற்றங்கள் நித்தமும்
கும்மிதான் அடிக்கும்!
அரசியலும் சினிமாவும்
அவரவர் பிழைப்பு!
புரியாமல் ஏனோ!
எரிகிறாய் வீணே!
வேடங்கள் கலைந்தால்
பாடங்கள் புரியும்!
விழித்தால் விலகும்
குழியொளி இருளும்!
கொ.பெ.பி.அய்யா.
============================================
3.இதோ இவள் இறந்து விட்டாள்..... ரஞ்சிதா
மூடாத சவப் பெட்டிகள்...
ஆழ் குழாய்க்குள்
மழலை உடல்கள்.. ......
மெத்தனத்தால்
செத்த உயிர்
கத்தினாலும் வந்திடுமோ..?
நஷ்ட ஈடு வந்து விட்டால்
நலம் பெறுமோ
பிரிவதுவும்......
பத்துமாத வலியோடு
பாசவலி குடல் அறுக்க
பணம் வைத்தியம் பண்ணுமோ ?
மூடித் தொலைத்தால் என்ன
மூடர்களே
நரபலி கொடுக்கவோ
புதைமணல் நீர் செய்தீர்
இமை குதறி எறும்பு ஊற
இறந்து விட்டாள்
என் குழந்தை.......
இனி நான் என்ன செய்வேன்......?!
*****************************************************************
நன்றி
நடுவர் குழு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
