வாழ்த்துக் கவிதை

நிறைவாய் வாழ்க…

"தாய்மொழிக் கவிதையால் வாழ்த்துவது
தாய் வாழ்த்துவது போலாகும் "

எனும் திடமான நம்பிக்கையுடன் வார்த்தை மலர்களால் படைக்க முயலும் கன்னி முயற்சி !! மணம் கமழும் மலர்க் கொத்து !!

வாய்மொழியாய் உதிர்த்தால் உதிர்ந்து பறந்துவிடும் என நினைந்து இனிய தமிழ் மலர்க்கணைகளால் வரிவடிவில் அலங்கரிக்க சிற்றறிவிற்கு எட்டியதை இயன்றவரை உதிர்த்துள்ளேன் ! ஏற்றுக் கொள்ளுங்கள் !!

மாயை நிறைந்த பூவுலகில் நொந்துவாடி வீழாமல்
சீரியதான நேரியதான சிந்தனைகளுடன் வாழும் நீர் வாழ்க!
வாழக்கிடைத்த பயன் நாம் நான் விடுத்துச் சுற்றமே
வாழவேண்டும் எனும் உண்மை உணர்ந்ந்த நீர் வாழ்க !

நீவீர் சிரித்து உன் சுற்றத்தையும் சிரிக்க வைத்து வாழும்
உம் வாழ்வை எண்ணிப் பார்க்கின்றேன்!
இதுவல்லவோ வாழ்க்கை எனப் பெருமிதமும்
இறுமாப்பும் எய்தி திக்கு முக்காடுகிறேன் !

வருடங்கள் வருவதிலும் போவதிலும் பயனில்லை
நற்செயல்களால்தான் பயன் என வாழும் இந்நல்ல
இதயங்களின் ஆயுளுடன் இறைவா என் ஆயுளின்
பெரும்பகுதியைச் சேர்த்துவிடு என வேண்டி வணங்குகிறேன் !!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...
நீங்களும் உங்கள் உணர்வுகளும் !!

வாழ்க நலமுடன்!
முனைவர்.வெ.வசந்தா.

எழுதியவர் : முனைவர்.வெ.வசந்தா. (10-Jun-13, 12:06 am)
பார்வை : 378

மேலே