காதல் இன்னும் புரியலையே ?????

இருவிழியால் காதல் சொல்ல
உன் உதடு மௌனம் கொள்ள
என் இதயம் துடிக்கிறதே ...

வலிகள் இன்றி துடிப்பதனால்
வலிய சென்று கேட்கத்தான்
மனசுக்கு தெரியலையே ....
காதல் கடன் இல்லையே .....

மனதை பார்க்கும் காதலுக்கு
மௌனம் என்னும் பதில் எதற்கு
உன் வாய்திறந்தால் விடை இருக்கு
இன்னும் பதில் இல்லையே ......

நிழலா நிசமா காதல்
கனவு போல நெஞ்சில்
நாளும் மலையாய் மாறி
தினமும் கனக்கிறதே ......

இன்னும் புரியலையே
காதல் இன்னும் புரியலையே ....

எழுதியவர் : ருத்ரன் (10-Jun-13, 5:45 pm)
பார்வை : 155

மேலே