ருத்ர காண்டம்
புலன் அறியா
பூத உடல் போர்த்திய
மாயைஒலி யுடையான்
மா னிடம் ஆவான்!
ஐம்புலப் போலியை
ஆட்சியுடையான்
அவன் ஆறாவது
போலியாவான்!
ஆறுதாசி யுடையான்
அவன்
அன்னை யறியா
தங்கொண்டி யாவான்!
மூன்று அன்னை
உடையான்
அவன்
தகப்பன் அறியா
தாரமுடையவன்
ஆவான்!
முதல் இரவில்
நடுக்க மிலான்
முன்னிரவில்
மனையாள் இழந்தவன்
ஆவான்!
அல்லது
மனையாள் அறுத்தவன்
ஆவான்!
நீதி பேசும்
நியதி யுடையான்
பாதிகாலம்
பழியும் பாவமும்,
மீதி காலம்
பாவியாகியும்
பாடை யேறுவான்
ஆவான்!
சத்தியக்கூர்மை
உடையான்
சமூகக்
கொடியனை
புத்தியக்கூர்மையால்
வெல்பவன் ஆவான்!
சதாகாலமும்
சாமான்யனை
சாமர்த்தியமாய்
ஆளும்
ஆதிக்கக்காரன்
மரணத்தால் மட்டுமே
தண்டிக்கப்படுபவன்
ஆவான்!