காதல்

இது வரை காணாத
இழப்பைக் கண்டேன்
இருதயம் வெடிக்கும்
நினைப்பைக் கொண்டேன்
இணைந்திருக்க ஏக்கம் கொண்டேன்
இவள் உணர்வை
அவர் உணர்வாரோ
சுவர் பூத்த என் வீடு
சிறையானது
அவர் பார்த்த ஒரு நொடியும்
வசந்தமானது
அவர் கொண்ட காதலின் வலி
தவறாக என் திமிரில் மோதியதோ
அன்று
அழகாக சிரித்தார்
அர்த்தம் தெரியவில்லை
அலை போல என்னைச் சுற்றி
அழுப்பின்றி அலைந்ததுவும்
அன்று நாழிகைக்குள் நொறுங்கிப் போனது

வார்த்தைகள் எனக்கு
வரம் தரவில்லை
நினைப்புக்கள் எனக்கு
நிம்மதி தரவில்லை
கனவுக்குள் வந்த
இராட்சசி ஒருத்தி
கலட்டி எரிய என் காதலை
கலராமல் ஒட்டிக்கொண்டேன்
நம்பிக்கை நாடாவால்
அவள் களவாட வந்தாளோ-இல்லை
அபகரித்தே விட்டாலோ
என் காதலை
உண்மை அறியாத பாவியானேன் ..................

எழுதியவர் : sailaja (11-Jun-13, 10:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே