காயங்கள்

கல் தடுக்கி விழுந்தாலும்
சொல் தடித்த மொழியானாலும் - காயம் காயமே !
அன்பு உள்ளம் மரணித்தாலும்
நட்பு உள்ளம் மௌநித்தாலும் - காயம் காயமே !
மாபெரும் சபையில் அவமதித்தாலும்
முன்னின்றவர் அவமதித்தாலும் - காயம் காயமே !
உழைப்பு சுரண்டலும்
பிழைப்பு விதிமீறல்களும் - காயம் காயமே !
சுட்ட புண் ,வெந்த புண்
கீறிய ரணம் ,வெட்டுக் காயம் - இதிலென்ன வலி
வேதநிப்பித்த வார்த்தைகள் , கூரிய கூற்றுகள்
ரகரகமாய் வலிகள் , சீழ் பிடித்த ஊண்கள்
வெந்து தகிக்கும் கங்குகள் தான் - இந்த
விந்தை மனித மனங்கள்
வலிகளால் ஒரு வாழ்க்கை
என்ன தவம் செய்தோம் மானுட பிறவி பெற .........,

எழுதியவர் : கலை நாகராஜ் (11-Jun-13, 10:48 am)
பார்வை : 225

மேலே