ரசனைகள்
இசைக்கின்றது
மழலையின் முத்தம்
புல்லாங்குழல்
அதனை ரசித்தபடியே ....!
தூங்கும்போது
அணைத்தபடியே
குழந்தை ...
ஏக்கத்தோடு பொம்மை
அவள் கைகளில்...!
இரண்டு கைகளிலும்
ஏந்தியபடியே
ஐஸ் கிரீம்
வழிகின்றது குட்டியின்
செவ்வாயில் எல்லாம் ...!
கடலை வண்டிக்காரனின்
முகமெல்லாம் சந்தோசம்
கடலை வாங்கிய
குழந்தையின் முகம் கண்டதும்...!
கோவிலில் இருக்கும்
பிச்சைக்காரனின்
முகம் மலர்ந்தது
சில்லறை போட்ட
குழந்தையின் மகிழ்ச்சி கண்டதும் ....!