பிரிவு உபசார விழா (கல்லூரி நண்பர்களுக்காக)
இமையின் பிரிவில் ஒளி பிறக்கும்
இதழின் பிரிவிலும் ஒலி பிறக்கும்
கடலின் பிரிவில் சிறு நதி பிறக்கும்
வானின் பிரிவில் சிறு துளி பிறக்கும்
விரலின் பிரிவில் குழலில் இசை பிறக்கும், குழந்தையின் நடை பிறக்கும்
நம் ஒவ்வொருவரின் பிரிவிலும் ஓர்
புது யுகம் பிறக்கட்டும்