அன்பே கடவுள்!!!

ஒரு முட்டாள்
மனிதனால் கூட,
ஒரு மாதுளையில்
எத்தனை விதைகள்
உள்ளன என
கணித்து விட இயலும்,
ஆனால்
கடவுளால் மட்டுமே
ஒரு விதையில் எத்தனை
மாதுளைகள் உள்ளன
என கணிக்க இயலும்!!!
****************************************************************************
கடவுள் மனிதனை
ஏன் வெற்றி
பெறவில்லை
என எந்நிலையிலும்
வினவுவது இல்லை,
ஆனால் ஏன்
முயற்ச்சிக்கவில்லை
என நிச்சயம் கேட்பார்!!!
****************************************************************************
சக மனிதர்களோடு
அன்பு செலுத்த
தெரியாதவன்,ஒரு
பொழுதும் கடவுளை
உணர்வது இல்லை,
காரணம் கடவுளின்
நிலையான
வடிவம் அன்புதான்!!!
****************************************************************************
கடவுளிடம் பேசுவதற்கு
மொழியோ,வார்த்தைகளோ
தேவைப்படுவதில்லை,
மனதில் இருப்பதை
அப்படியே உணர்ந்து
கொள்ளும் ஆற்றல்
உடையவர் கடவுள்!!!
****************************************************************************
கடவுள்
நாம் கேட்பதை
எல்லாம் கொடுப்பதில்லை,
நமக்கு எது
மிகச்சரியான தேவையோ
அதை மட்டுமே கொடுக்கிறார்!!!
****************************************************************************
-அன்புடன் நவீன் மென்மையானவன்