கூண்டு கிளி நான்
கண் எதிரே உலகம் இருக்கிறது,
இரு சிறகும் உயிரோடு தான் இருக்கிறது ,
சொன்னதை சொல்வேன் என்பதால்,
சொல்ல சொல்கிறார்கள் ...,
அவர்கள் சொன்னதை மட்டும்.
மற்றவரின் விதி சொல்லி போகிறேன் ....,
என் விதி ஏனோ எனக்கு தெரியவில்லை....
தவறுகள் செய்யாத போதும்,
ஒரு ஆயுள் கைதி நான்...
ஒரு கூண்டில்...
என் மொழி(வலி) புரிந்தால் சொல்லுங்கள்....
அந்த ஜோசியக்காரனிடம் என் தீர்ப்பின் பரிசீலனை பற்றி.....
இப்படிக்கு,,,
ஒரு அஞ்சுகம் -கூண்டு கிளி....