அறிவாயா...?

சொட்டச் சொட்ட சிந்தும்

மழைத்துளியில்

முகம்

நனைக்க நினைத்தேன்...

உன்னைக் கண்டு வந்த

மேகமாக எண்ணி...

பட்டுக் கன்னம் தொட்டு

பாவை என் சுகம் கேட்ட

தென்றலை நின்று

மூச்சு முட்ட

உள் வாங்க நினைத்தேன்...

உன் சுவாசம் பட்டு

வந்த காற்றாக எண்ணி...

எட்டாமல் சென்ற நிலா

கொட்டித்தீர்த்த

பால் ஒளியில்

இரவு முழுக்க

தூங்காது இருந்தேன்...

எப்படியும்

என்னவனும் ரசித்திருப்பான்

என்று எண்ணி...

எனைச்சுற்றும்

உன் நினைவுகள்

இயற்கையாய் இருப்பதால்

என்றுமே அவற்றுக்கு

அழிவில்லை...

அறிவாயா...?

எழுதியவர் : கவிதை தேவதை. (13-Jun-13, 8:57 am)
பார்வை : 97

மேலே