இருவர் உள்ளம்...!!!

இன்பக் காற்றுக்களை
சுமந்து சுமந்து
தென்றலுக்குள்
அகப்பட்டுக்கொண்ட
இதயங்களின்
பாஷைகள் தான்
என்னவோ...!!!

புத்தாடை கட்டி
புதிப் பொழிவோடு
தென்றலும்
இதயங்களுக்குள்
புகுந்துகொண்டனவா
இல்லை
தட்டுத் தடுமாறி
காயங்களை
பதித்து விட்டனவா...!!!

ஒரு மனதோடு
மறு மனது
முட்டி மோதி
மகிழ்கின்றனவே
எப்படித்தான்
காந்த சக்தியொன்று
இவர்களுக்குள் பிறந்து
சங்கமம்
ஆகிக்கொண்டதோ...!!!

இருவர் உள்ளங்களும்
தடுமாறிக் கொள்கின்றனவே
ஏதோ ஒரு
சுகமான சுமைகளை
சுமந்துகொண்டே
நந்தவனத்தில்
பாதங்களை
பதிப்பதால் தானோ ....!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (14-Jun-13, 3:59 pm)
சேர்த்தது : rajendrakumar
பார்வை : 139

மேலே