வஞ்சகம்

வஞ்சகம்

குக்கிராமம் ஒன்றதனில்,

கள்ளம் கபடம் சூது வாது,

யாதும் அறியாள் என வளர்ந்தாள்,

சேற்றில் விளைந்த செந்தாமரையென,

இயற்கை அழகில் அவள் மலர்ந்தாள்;



எழ்மை குடும்பத்தில் பிறந்தும் அவள்,

எளிய பெற்றோர்கை மகிழ்ந்திருந்தாள்;

எட்டியதும் அவள் மண வயதை,

ஆருடம் ஜோதிடம் என பார்த்து,

புத்தொரு அகமும் உட்புகுந்தாள்;



மறைந்திருந்த உள்நோக்கமது,

தன் கபட முகத்தினை புலப்படுத்தி,

நகை ,சீர்வரிசையென வதைதெடுக்க,

கரை விழுந்த மீன்போல்,

அல்லலுடன் துன்புற்றாள்.



கட்டிய கணவனும் மனைவியை மறந்து,

பரத்தையரை உடன்கொண்டு,

தீய பழக்கங்களை வெளிக்காட்டி,

இம்மகளை இழித்துரைக்க,

ஏழை பெற்றோர் கதறினரே;



மனைவியை கயவன் தீயேற்றி,

வெந்தழல்அவியும் முன்னரே மற்றொரு,

மங்கையைப் பிடித்து முன்னிறுத்தி,

எரியும் அவள் சடலத்தையே,

அக்னி சாட்சி என மணந்தனனே !



மேலுகத்தில் தனி நானில்லை,

அன்பிற்குரிய பெற்றோர் அவரும்,

பாதை எனதை பின் தொடர்ந்து,

துரிதத்தில் வந்தடைந்து,

தனிமை எனதை போக்கினரே!

சம்பத்

எழுதியவர் : சம்பத் Kolkata (14-Jun-13, 7:38 pm)
பார்வை : 102

மேலே