பயமோ!பக்தியோ!

எதைத்தொலைத்தோம்!
எதைத் தேடுகிறோம்!
தொலைத்ததும் பொய்!
தேடுவதும் நாடகம்!

இருக்கிறதென்பதோ
இலக்கு நோக்கும்
இயற்கை தாக்கம்!

இல்லையென்பதும்
இருந்தால் நலமே
எனும் ஏக்கம்!

முடிவில்லாத முடிவுகள்!
விடியல் காட்டும்
விளக்கு எது?

அதுவே தேடல்!
அதுவே ஞானம்!

அனைத்தும் கடந்துள்ள விந்தை
யாருக்குத்தான் கட்டடங்கும்!
அது இயற்கை இரகசியம்!
அதனால் தேடல் தொடர்கிறது.

வாதங்கள் வளர்வதல்ல தேடல்!
ஞானங்கள் வளர்ப்பதே தேடல்!

விந்தையை வியப்பதும்
சிந்தையில் உணர்வதும்
பயமோ!பக்தியோ!நலமே!

எதற்கு முடிவில்லையோ
அதற்குத் தீர்வில்லை!
தீர்வுகள் தேடும் ஞானமே
தெய்வ நிலை!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (15-Jun-13, 9:28 am)
பார்வை : 112

மேலே