கருப்பு நண்பா உன்னை பழித்தால் !
இரவை ஒருநாள் ஓவியம் வரைய சொன்னேன்
இருட்டாய் அமாவசையென வரைந்து வைத்தது
கருமை கண்டுநான் கை கொட்டி சிரித்தேன்
கர்வ பட்ட என்னையே இரவு வெகுவாய் கண்டித்து
ஓவியம் வரைந்து வண்ணம் உலர போட்டேன்
உற்று நீ கவனி பௌர்ணமியில் அது தெரியும்
குற்றம் உணர்ந்தேன் குறையும் கலைந்தேன்
இரவின் கனவிலே என்னை கூட மறந்தேன்