இழிஞன்
அன்னையவள் தருகின்ற தாய்ப்பால்
..அமுதுண்டு வளர்கின்ற மனிதன்
தென்னையது தருகின்ற இளநீர்
..தீர்த்தமதை குடித்தாலும் புனிதன்.
பின்னுமவன் போதைதரும் மதுவில்
..பேரின்பம் தானென்று வீழ்ந்து
முன்னேற்றம் தடையாக்கும் போது
..முடிவினிலே ஆவானே இழிஞன் !