அன்பு செய்யாதே

அன்பே சிவம்

என்று மூலம் சொன்ன

திருமூலனை கேட்கிறேன்

எந்த அன்பு சிவம் ?

எல்லா அன்பும் சவம்தனே ?

இங்கு...

ஒரு நாள் இல்லை ஒரு நாள்

பின்பு

எப்படி சிவமாகும் ?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்பே சிவமா ?

சிவமே அன்பா ?

சிவமே சவமா?

ஒரே குழப்பமா கீது

என்ன செய்யா ....?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்பு அன்பா இருக்கட்டும்

அறிவு அறிவா இருக்கட்டும்

சிவம் சிவமா இருக்கட்டும்

சவம் சவமா இருக்கட்டும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நமக்கு என்ன ஆகா போகுது ?

ஒன்னு கிடையாது

அன்ப வைத்துக்கிட்டு

ஒரு ரூபாய் பல்லி மிட்டாய்

கூட வாங்க முடியாது என்கிற போது

அது எதுவா இருஇந்தா

நமக்கு என்ன ?

எந்த எழலவா இருஇந்தா

நமக்கு என்ன ?


=======================================

அன்பை ஆதமாய் பேசி...

நீயும் அன்பாக இரு

கடவுள் அன்பாக இருக்கிறார்

உன்னை நேசிப்பது போல் உன்

சத்ருவையும் நேசி என்று சொன்ன

ஏசு

உலகம் அவருக்கு தந்த

அன்பின் பரிசு

சிலுவை மரணம்

அன்று ....

அதனால் உலகில்

அன்பு பாவமாகி

மரிக்கிறது மாண்பு மிகு மக்களிடம்

மீண்டும் மீண்டும்

ஆகவே ...

எதையும் உலகில்

அன்பு செய்யாதே

யோசி

அட!!!!

ஒருமுறை மட்டும் யோசி

அப்புறம் உன் ஈஸ்டம் ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (16-Jun-13, 7:06 am)
பார்வை : 99

மேலே