தந்தைக்கு என் தட்சணை…! 

புத்தனை புகழாதே ..........!
கர்த்தனில் கரையாதே .......!
கூத்தனிடம் கூடாதே......!
பெற்றெடுத்து பெயர்கொடுத்து
செத்துசெத்து உனைவளர்த்த 
உத்தமராம் உன்தந்தை 
உயிரோடு வாழும்வரை..........!
யாரவர்கள்................................?
உறவினை உதறியெறிந்து 
ஒருமரத்தடியில் ஓயந்தமர்ந்தோர் ..........!
யாரிவரோ.......?
உறவோடுதன் உயிராடக்கண்டும் 
உரத்தோடு உனைவளர்த்தோன்..........!

எழுதியவர் : காசி. தங்கராசு  (17-Jun-13, 12:12 am)
பார்வை : 76

மேலே