"பெண் படைப்பாளிகளுக்கு ஓர் தகவல்"

வணக்கம்...

சகோதரிகளே... தோழிகளே....

தங்களுக்கு ஏதேனும் முன் பின் தெரியாத உறுப்பினரிடமிருந்து தவறான செய்திகள் விடுகை மூலமாக வந்தால், முதலில் எச்சரியுங்கள், எச்சரித்தும் விடுகைகள் தொடர்ந்தால்...
பொறுமையாக இருக்காமல் நமக்கு ஏன் இந்த வம்பு என்று எண்ணி அமைதியாக இருக்காமல்,
கண் கலங்கி நிற்காமல், தகுந்த ஆவணத்தோடு தைரியமாக, எழுத்து தளத்தின் கீழுள்ள தொடர்பிற்கு எனும் பகுதிக்கு சென்று புகார் அளியுங்கள்.

"Terms of Use Privacy Policy விதிமுறை தொடர்புக்கு
Copyright © 2013 Hiox Website Designed by Free Designer Templates. "

உங்கள் புகார்களுக்கு 24 மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்களுக்கு இங்கு முழு பாதுகாப்பும் சுதந்திரமும் உண்டு. என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

தனி விடுகையில் சில நல்ல மாற்றங்கள் செய்வதாக நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

எனது புகாரினை ஏற்று நடவடிக்கை எடுத்த தள நிர்வாகி திரு. ராஜேஸ்குமார் அவர்களுக்கும், எழுத்து குழுமத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.


-PRIYA

எழுதியவர் : PRIYA (17-Jun-13, 10:08 pm)
பார்வை : 129

மேலே