உன் நினைவு மழை

வானத்தில் இருந்து
பொத்துக்கொண்டு விழப்போகும்
மழைத்துளி போல
என் இதயத்தை
முட்டி மோதிக் கொண்டு
வெளியே வரத் துடிக்கும்
உன் நினைவு மழை--
அதனால் வெளியேறத்துடிக்கும்
குளிர் காற்றான வார்த்தைகள்
சிந்தையும் மனமும் இணைந்து

எப்போது இந்த நல்ல காரியம்
நிறைவேற???
என் அன்புப் பெண்ணே??

எழுதியவர் : சாந்தி (17-Jun-13, 11:05 pm)
Tanglish : un ninaivu mazhai
பார்வை : 75

மேலே